Wednesday, June 23, 2010

தமிழ் இணையப் பயிலரங்கு புகைப்படங்கள்




தமிழ் இணையப் பயிலரங்கு

சூன் 24 - 27, 2010 வரை கோவையில் நடக்கும் தமிழ் இணையப் பயிலரங்கு வலைப்பதிவு.

தமிழ் இணையப் பயிலரங்கு

நாட்கள்: சூன் 24-27, 2010. (4 நாட்கள்)

இடம்: உலகத் தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சி, கோவை.

அரங்கு எண்கள்: 98, 99, 100, 101, 102, 103.


பயிற்சித் தலைப்புகள்:

* கணினியில் தமிழில் எழுதுவது, படிப்பது எப்படி? பல்வேறு தட்டச்சு முறைகள், தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி.

* தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள்.

* கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் அறிமுகம்.

* இலவச தமிழ் மென்பொருட்கள்.

* இணையத்தில் தமிழில் என்னென்ன உள்ளன?

* இணையத்தை எப்படிப் பயன்படுத்துவது ? - எளிய தமிழில் அறிமுகம்.

* செல்பேசியில் தமிழ் பயன்படுத்துவது எப்படி? தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி?

* வலைப்பதிவுகள் என்றால் என்ன? எப்படித் தொடங்குவது, பயன்படுத்துவது?

நாள் முழுதும், 15 நிமிட அளவில், திரும்பத் திரும்ப நேரடி உரைகள் மூலமும், முன்பே பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும். பார்வையாளர்கள் தமிழ் இணையம் தொடர்பான தங்கள் ஐயங்களைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். நேரடியாகப் பயிற்சி செய்து பார்க்கத் தேவையான கணினிகளும் வழங்கப்படும். இப்பயிற்சிகளில் வணிகம் சாரா பொதுவான தொழில்நுட்பங்களே அறிமுகப்படுத்தப்படும்.

தமிழகம், பெங்களூரு, இலங்கை முதலிய பகுதிகளில் இருந்து வந்துள்ள 30க்கும் மேற்பட்ட தமிழ் இணைய வல்லுனர்கள் இப்பயிலரங்கில் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி முடிப்போருக்கு தமிழ்த் தட்டச்சு குறித்த கையேடும், தமிழ் மென்பொருட்கள், எழுத்துருக்கள அடங்கிய இறுவட்டும் இலவசமாக அளிக்கப்படும்.